உலக அளவில் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் ஷ்ரத்தா தாஸ் ஆகியோர் விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும், கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதனால், இருவரும் உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.