நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும் போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்க வேண்டும் என்ற உந்துதல் ரத்தன் டாடாவிற்கு ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. பின்னர் ரத்தன் டாடா, உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். அதன்படி ‘டாடா நானோ’ காரை 2008-ல் தயாரித்து நடுத்தர குடும்பத்தினரின் கார் கனவை அவர் நிஜமாக்கினார்.