பென்ஸ் படத்தில் ரவி மோகன்: LCU-வில் புதிய அத்தியாயம்

5003பார்த்தது
பென்ஸ் படத்தில் ரவி மோகன்: LCU-வில் புதிய அத்தியாயம்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவெர்ஸில் (LCU) அடியெடுத்து வைக்கிறார். சம்யுக்தா நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘லியோ’ படப்பிடிப்பு நடைபெற்ற செட்டிலேயே ‘பென்ஸ்’ படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளரும், கதாசிரியருமான லோகேஷ் கனகராஜ் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி