மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு முடியும் வரை படத்தை வெளியிடப்போவதில்லை என நடிகர் ரவி மோகன் அறிவித்துள்ளார். தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்த நிலையில் ரவி மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். “தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உண்மை, சத்தியம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே 2 ஆண்டுகளாக மவுனமாக இருந்தேன்; என்னை மேலும் மேலும் சீண்டி பார்க்கிறார்கள். பெண்களை மதிப்பது குறித்து எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என்றார்.