தங்க நகையை வைத்து கடன் பெறுவதில், புதிய நெறிமுறைகள் வெளியாகியுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடமானமாகக் கொண்டு கடன் வழங்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, தனிநபர் அதிகபட்சம் 10 கிலோ வரை வெள்ளி நகைகளையும், 1 கிலோ வரை தங்க நகைகளையும் அடமானம் வைத்துக் கடன் பெறலாம். இந்த விதிகள் 2026 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.