இந்திய ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை புரோக்கர் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் புதிய கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இனி வழங்கும் கடனுக்கு 100% பிணை கட்டாயம். மேலும், புரோக்கர்கள் தங்கள் சொந்த வர்த்தகத்திற்காக வங்கிக் கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நிதி ஆபத்துகளை குறைக்க எடுத்ததாக கூறப்படுகிறது.