ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணிகள் மோதின. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (ஏப்.15) இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 146 ரனகளுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.