திமுக-வில் கூட்டணி பல பிரச்னைகள் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்.11) நடக்கும் India Today கருத்தரங்கில் பேசிய அவர், “திமுக-வில் கூட்டணி ஆட்சியா, தனி ஆட்சியா என்ற குழப்பம் அவர்களது கூட்டணியில் உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் நேரடி விவாதத்திற்கு தயார்” என்றார். மேலும், “அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் திமுகவால் ஏற்பட்ட குளறுபடிகள் சரி செய்யப்படும்” என தெரிவித்தார்.