தனது குழந்தைக்கு தொழிலதிபர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பதை நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தான் தயார் என்று ஜாய் கிரிசில்டா சவால் விடுத்துள்ளார். இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், "குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இந்த நிலையிலும், ரங்கராஜ் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்" என அவர் சாடியுள்ளார். மேலும், "மிரட்டித் திருமணம் செய்ய மாதம்பட்டி ரங்கராஜ் என்ன சின்ன குழந்தையா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.