சென்னையில் சில டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் முறையாக பராமரிக்கப்படாததே கூடுதல் விலை வசூலிப்பிற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கட்டாயமாக ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.