ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை சுமார் 10% முதல் 12% வரை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வால், இதுவரை ரூ.199-க்கு இருந்த ரீசார்ஜ் திட்டம் இனி ரூ.222 ஆகவும், ரூ.899-க்கு இருந்த திட்டம் ரூ.1006 ஆகவும் உயரக்கூடும் என கூறப்படுகிறது. இந்த திடீர் விலை ஏற்றம் கோடிக்கணக்கான மொபைல் பயனாளிகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.