தவெக அமைச்சரவையில் இணைந்த விசிக, ஐயூஎம்எல்-ஐ ஆபாசமாக விமர்சித்து, ஆ.ராசா பதிவு வெளியிட்டிருந்தார். விசிக, ஐயூஎம்எல்-ஐ விமர்சிக்க பெண்களை இழிவு செய்யும் வகையில் ஆ.ராசா கருத்து தெரிவித்திருந்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த ஆபாச பதிவை ஆ.ராசா டெலீட் செய்திருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் இன்று (மே.22) கேள்வி எழுப்பிய நிலையில், அங்கிருந்து ஓட்டம் பிடித்து தனது காரில் ஏறிச் சென்றார்.