விழுப்புரம்: மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தில் சாதிக் பாஷா (28) என்பவர் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த விசாரணையில், முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரகமதுல்லா என்பவர் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. ரகமதுல்லாவின் மனைவிக்கும் சாதிக் பாஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எச்சரித்தும், சாதிக் பாஷா கேட்கவில்லை என்பதால் அவரை நண்பர்கள் உதவியுடன் ரகமதுல்லா கொலை செய்துள்ளார்.