கள்ளச்சாராய வழக்கில் திருந்தியோருக்கான மறுவாழ்வு நிதி ரூ.1 லட்சமாக உயர்வு

1973பார்த்தது
கள்ளச்சாராய வழக்கில் திருந்தியோருக்கான மறுவாழ்வு நிதி ரூ.1 லட்சமாக உயர்வு
கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றத்துக்காக சிறைவாசம் அனுபவித்து, பின்னர் மனம் திருந்தியோருக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். சிறைவாசத்துக்குப் பிறகு அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல், வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தில் இயல்பாக வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த நிதியுதவி உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி