தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மகாசேனா'. இதில் சிருஷ்டி டாங்கே, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வருகிற டிச. 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.