2010ல் சென்னை திருவான்மியூரில் ஏழுமலை என்பவர் கொலை வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் 9 பேரை விடுதலை செய்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்விரோதம் காரணமாக ஏழுமலை கொலை செய்யப்பட்டார். குற்றச்சாட்டப்பட்ட 16 பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 9 பேரை குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஸ்டீபன்ராஜ், சந்துருவுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாத 7 பேரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.