காசாவில் போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொன்று சென்ற 40 கப்பல்களை இஸ்ரேலிய இராணுவம் சிறைபிடித்துள்ளது. இந்த கப்பல்கள் மத்தியதரை கடல் பகுதியில் சென்றபோது இஸ்ரேலிய படையினரால் இடைமறிக்கப்பட்டு, அவற்றிலிருந்த அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த கப்பல்களில் பயணம் செய்த கிரேடா துன்பர்க், ரீமா ஹாசன், தியகோ அவிளா உட்பட 500-க்கும் மேற்பட்ட சர்வதேச சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.