தன்பாலின ஈர்ப்பாளர்களின் வரலாற்று சின்னமாக கருதப்படும் நியூயார்க் நகர தேசிய பூங்காவிலிருந்து LGBTQ கொடி அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் தலைமையிலான புதிய அரசு தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகளை திட்டமிட்டு மழுங்கடித்து வருவதாக கூறி, அந்நகரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அமெரிக்காவில் LGBTQ சமூகத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.