'காலனித்துவத் தொடர்பு' உள்ள பெயர்களை நீக்கும் நோக்கில், அனைத்து ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ராஜ் பவன்களை 'லோக் பவன்கள்' என்றும், ராஜ் நிவாஸ்களை 'லோக் நிவாஸ்' என்றும் மறுபெயரிடப் பரிந்துரைத்துள்ளது. இந்தக் கடிதம் கிடைத்த உடனேயே மேற்கு வங்காளம் மற்றும் லடாக் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டன.