தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான இ.சுந்தரமூர்த்தி (84) காலமானார். சென்னை பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தமிழுலகிற்கு 70-க்கும் மேற்பட்ட அரிய நூல்களை படைத்து தந்துள்ளார். இலக்கிய துறையில் ஆற்றிய அரும்பணிகளுக்காக அறியப்படும் அவரது மறைவு, தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.