பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பஷீர் பதர் காலமானார்

10பார்த்தது
பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பஷீர் பதர் காலமானார்
பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் பஷீர் பதர், 91 வயதில் நேற்று மதியம் மத்தியப்பிரதேசத்தின் போபாலில் காலமானார். நவீன உருது கவிதை மற்றும் கஜல் பாடல்களில் இவரது பங்களிப்பு மகத்தானது. எளிய சொற்களில் காதல், தத்துவ வரிகளை எழுதிய இவர், 7க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளையும், 18,000க்கும் அதிகமான கவிதை வரிகளையும் எழுதியுள்ளார். நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த பஷீர் பதரின் மறைவு இலக்கிய வாசகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி