கரூர் எஸ்.பி அலுவலகத்தில் ஐ.ஜி அஸ்ரா கார்க் ஆலோசனை நடத்திய நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விஜய் பரப்புரைக்கு வழங்கப்பட்ட அனுமதி, நிபந்தனைகள் அடங்கிய கோப்புகள் ஒப்படைக்கப்பட்டன. தவெக சார்பில் கேட்கப்பட்ட இடங்கள், பரப்புரையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு பணி உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையில், தவெக விஜய்க்கு எதிராக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விஜய் தரப்பினர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.