நாடுமுழுவதும் 77-வது குடியரசு தின விழா நாளை (ஜன.26) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தெற்கு ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட ரயில்வே பாதுகாப்பு படை (RPF) மற்றும் இருப்பு பாதை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.