ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் தங்கம், வெள்ளி நகைகளை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளியோர் மற்றும் நடுத்தர மக்கள் நல சங்கத் தலைவர் லிங்கபெருமாள் அளித்துள்ள இந்த மனுவில், சாமானிய மக்களை கருத்தில் கொண்டு, அரசு குறைந்த விலையில் ஆபரணங்களை விநியோகிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நூதன கோரிக்கை தற்போது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.