அலக்நந்தா என்ற அண்டத்தினை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

NCRA–TIFR நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் அலக்நந்தா என்ற அண்டத்தினை கண்டுபிடித்துள்ளனர். 12 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இது பேரண்டம் 1.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்த போது உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளனர். அலக்நந்தாவில் ஒரு நீண்ட கால சுழல் வடிவம் இருப்பது, அந்த மாதிரிகள் கணித்ததை விட பேரண்டத்தில் முன்னதாகவே சிக்கலான அண்டக் கட்டமைப்புகள் இருந்தன என்பதைக் குறிக்கிறது.
