பாஜகவிலிருந்து
அண்ணாமலை விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மீனவர் பிரிவு மாநில தலைவர் நீலாங்கரை முனுசாமி தனது விலகல் கடிதத்தை மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பியுள்ளார். அவரை தொடர்ந்து கட்சியின் IT Wing நிர்வாகிகள் மற்றும் கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும் தங்களது ராஜினாமா அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு விலகும் நிர்வாகிகள் அனைவரும்
அண்ணாமலை தொடங்கவுள்ளதாக கூறப்படும் புதிய கட்சியில் இணைய உள்ளதாக பேசப்படுகிறது.