ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற அதிபர் ட்ரம்பிற்கு உத்தரவிடும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேறியுள்ளது. இது அதிபர் ட்ரம்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமெரிக்க மேல்சபையின் ஒப்புதல் இல்லாததால் இத்தீர்மானம் உடனடியாகச் சட்ட வடிவம் பெறாது என்றாலும், அதிபருக்கு எதிராக இப்படி ஒரு தீர்மானம் நாடாளுமன்றக் கீழவையில் நிறைவேறுவது இதுவே முதல்முறையாகும்.