டெல்லி: திருமண பந்தத்தின் மீதான மரியாதையை மக்கள் மறந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விவாகரத்து தொடர்பாக இன்று (அக்.17) நடந்த விசாரணையில், உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.பி.பர்திவாலா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்து விவகாரங்கள் அதிகரித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். தன்னுடைய சான்றிதழ்களை கணவரிடம் இருந்து பெற்றுத்தரக்கோரி பெண் ஒருவர் மனுதாக்கல் செய்த நிலையில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.