தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை இன்று நேரில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் சமர்ப்பித்தார். இந்நிலையில், இந்தச் சந்திப்பு குறித்த வீடியோவை ஊடகங்களுக்கு மின்னஞ்சல் செய்த ஆளுநர் மாளிகை, அதில் "மரியாதைக்குரிய முதல்வர் விஜய்" என்று குறிப்பிட்டுள்ளது. இன்னும் முறைப்படி பதவியேற்காத நிலையிலேயே, ஆளுநர் மாளிகை அவரை 'முதல்வர்' எனக் குறிப்பிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.