தமிழ்நாட்டில், ஒரே ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வருவாய் ரூ.620 கோடியாக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “அதிமுக ஆட்சியில் சுயஉதவிக்குழுக்களின் வருவாய் ஆண்டுக்கு ரூ.10 கோடியை கூட எட்டவில்லை” என விமர்சனம் செய்தார். பெண்கள், தங்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் ஒரே குழுவாக சேர்ந்து செயல்படுதலே “சுய உதவிக் குழு” எனப்படும்.