அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் இளைஞர்கள் ஹாக்கி விளையாடிக்கொண்டிருந்த போது, மர்ம நபர் நடத்திய
துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், தனிப்பட்ட பகையே இதற்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிட மறுத்துள்ள அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.