தமிழ்நாட்டில் பருவ மழையின் தாக்கத்தால் அதிகரித்த விளைச்சல் காரணமாக அரிசி விலை கணிசமாக குறையும் என்று வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குறுவை சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில், சம்பா சாகுபடியும் தற்போது மாநிலத்தில் தொடங்கியுள்ளது. விளைச்சல் அதிகரிப்பால் 60 கிலோ நெல் மூட்டை ரூ.1400 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது. அதுவே, 2023-ம் ஆண்டில் ரூ.1700 முதல் ரூ.1800 வரை இருந்தது.