“ராம் இன் லீலா” படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

4515பார்த்தது
“ராம் இன் லீலா” படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு
நடிகர் ரியோ ராஜ் தற்போது "ராம் இன் லீலா" என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்குகிறார். இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். கதாநாயகியாக வர்திகா நடிக்கிறார். காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள படக்குழு அறிவித்துள்ளது.