டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டின் கடைசி நாளான கடந்த 20ஆம் தேதி, மாநாட்டு அரங்கில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளுடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று மேலும் 3 காங்கிரஸ் கட்சியினர் இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம், கைதான காங்கிரசாரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.