தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் முபாரக் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் கடும் வெப்பத்தை எதிர்கொள்வது அவர்களின் உடல்நலனைப் பாதிக்கும் என்பதால், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.