எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி
ஸ்டாலின் கைதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில்
போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில்
போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட
திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட 851 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.