நாசிக் ஹிராவாடி பகுதியிலுள்ள ஜூவல்லர்ஸ் கடைக்குள் இரவு புகுந்த முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கியைக் காட்டி நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். ஊழியர்கள் எதிர்த்துப் போராடியதால் கொள்ளையர்கள் தப்பினர். இந்த மோதலில் தலையில் பலத்த காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பிய கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.