நடிகர் ரோபோ சங்கர் குறித்து நடிகர் விமல் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். விமலின் 'வடம்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் இன்று (பிப்., 27) நடைபெற்றது. இதில் பேசிய விமல், "ரோபோ சங்கர் இறப்புக்குச் செல்ல முடியவில்லை. அன்று குற்றாலத்தில் ’வடம்’ படப்பிடிப்பில் இருந்தேன். அந்தக் காட்சி பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது. அன்று காட்சி எடுக்கவில்லை என்றால் பெரிய நஷ்டம் ஆகும். எனவே, போக வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள். என் மனைவி மட்டும் ஆறுதல் சொல்லப் போனார் என்று தெரிவித்தார்.