தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு துவங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குரிமையை பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனித்துவமான ஏற்பாடு கவனம் ஈர்த்துள்ளது. வாக்களிக்க வருவோருக்கு “TINA” என்ற ரோபோ சாக்லேட் வழங்கி வரவேற்கிறது. இந்த புதுமையான முயற்சி வாக்காளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, தேர்தல் விழிப்புணர்வையும் அதிகரித்து வருகிறது.