ரஷ்யாவில் மின்னணு கடையில் தன்னைத் தள்ளிய நபரை நோக்கி மனித உருவ ரோபோ ஒன்று காலைத் தூக்கி உதைக்க முயன்ற காட்சி வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 'ரோபோவுக்கு கோபம் வந்துவிட்டது', 'டெர்மினேட்டர் நிஜமாகிவிட்டது' என நெட்டிசன்கள் நகைச்சுவையாக விவாதித்து வருகின்றனர். இருப்பினும், இது ரோபோவின் சொந்த செயலா அல்லது ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதா என்ற விவாதமும் எழுந்துள்ளது.