ரோபோ சங்கருக்கு விருது.. மனைவி, மகள் உருக்கம்

3944பார்த்தது
தமிழக அரசு சார்பில் சினிமா, சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று (பிப்., 13) நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி பிரியங்கா, பேரன் உடன் மேடையேறி பெற்றுக் கொண்டார். "என் கணவர் என் பேரன் வடிவில் எப்போதும் என் அருகில்தான் இருக்கிறார்" என்று பிரியங்கா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது மகள் இந்திராஜாவுக்கும் விருது வழங்கப்பட்டது.

நன்றி: தந்தி