புதுச்சேரியில் இன்று (ஏப்.9) சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் காலை 7 மணி முதல் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களை வரவேற்கும் விதமாக வாக்குச்சாவடியில் ரோபோட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘நான் உங்கள் தேர்தல் உதவி ரோபோட்’ என தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் அந்த ரோபோட், வாக்களர்களை வரிசையாக வருமாறு அறிவுறுத்துகிறது. தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.