சீனாவின் வூஹான் நகரிலிருந்தபடியே ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம், ஹைதராபாத் AINU மருத்துவமனையில் இருந்த 57 வயது பெண்ணுக்கு மூத்த சிறுநீரக மருத்துவர் டாக்டர் சையத் முகமது கவுஸ் தொலைதூர அறுவை சிகிச்சை செய்துள்ளார். சுமார் 3,900 கி.மீ தூர இடைவெளியை கடந்து, பெண்ணின் சிறுநீர்க்குழாய் அடைப்பை நீக்கும் 'யுரடெரிக் ரீஇம்ப்ளான்டேஷன்' சிகிச்சையை அவர் துல்லியமாக செய்து முடித்துள்ளார். மருத்துவ துறையில் மைல்கல்லாக அமைந்த இந்த அதிநவீன சிகிச்சைக்கு பின் நோயாளி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.