சின்னத்திரை சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கும் நடிகை ரோஜாவின் தகுதி குறித்து நடிகை வனிதா விஜயகுமார் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோஜா தங்களுக்கு குடும்ப நண்பர்தான் என்றாலும், ஒரு சமையல் கலை நிபுணருக்கான நடுவர் இருக்கையில் அமர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று வனிதா சீண்டியுள்ளார். மேலும், தான் ஒரு தேர்ந்த சமையற்கலைஞர் என்பதால் அந்த நடுவர் சீட்டில் அமர தானே தகுதியானவள் என்றும் வனிதா விஜயகுமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.