கால்பந்து வரலாற்றிலேயே ஒரு ஆண்டில் 40-க்கும் மேற்பட்ட கோல்களை அதிகமுறை அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். கடந்த 2010 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் (2019 தவிர்த்து), மொத்தம் 14 முறை அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் 13 முறை இந்த சாதனையை செய்துள்ள லியோனல் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார்.