வேளாண் இயந்திர பராமரிப்பு மையம் அமைக்க ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த மையங்களில் மின் மோட்டர்கள், அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்கள் உள்ளிட்டவற்றை பழுது நீக்க முடியும்.