தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை ரூ. 1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், “பறக்கும் படை சோதனையில் பிடிபடும் பணம் அல்லது பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் ஒப்படைக்கப்படும்” என்றார்.