'Graylabs' எனும் AI நிறுவனத்தின் CEO-வான அமன் கோயல் என்பவர் தன் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் பணியாளருக்கு ரூ.1 லட்சம் சம்பளம் தருவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அமன் கோயல், அவர் மனைவி இருவருமே ஐஐடியில் படித்தவர்கள். ஐடி துறையில் தனி நிறுவனத்தை தொடங்கி அவர்கள் பிஸியாக இருப்பதால், படித்த பெண் ஒருவரை வீட்டு வேலைக்கு நியமித்து அவருக்கு House Manager என பதவி கொடுத்துள்ளனர்.