ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சண்முகம், நேற்று முன்தினம் (மே 15) லக்காபுரத்தில் நடந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது உள்பட பல மாற்றங்கள் வரவுள்ளதாக தெரிவித்தார். அப்போது, மதுபிரியர்கள் கூடுதல் விலை வசூலிப்பதாக கேள்வி எழுப்பினார். அதற்கு எம்எல்ஏ, இனி அப்படி நடக்காது என்றும், நடந்தால் தன்னிடம் கூறுமாறும் கூறினார். மதுபிரியர் உடனடியாக கடையில் காட்டித் தருவதாக கூறியபோது, எம்எல்ஏ சண்முகம், தொகுதி அலுவலகத்தில் வந்து கூறுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.