ரூ.100, ரூ.500 நோட்டுகள் செல்லாது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியானவை என்று இந்திய ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. இந்த நோட்டுகள் திரும்ப பெறப்படவில்லை என்றும், இவை தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லும் என்றும் வங்கி நிர்வாகம் திட்டவட்டமாக கூறியுள்ளது. பணப் பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.